புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகை தருவதற்காக நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்தின் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்தார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.