நாளை முதல் 4ம் திகதி வரையில் அதிபர்களுக்கான விடுமுறை ரத்து

நாளை முதல் 4ம் திகதி வரையில் அதிபர்களுக்கான சகல விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ளக் கூடாது.

பாடசாலை சீருடைகளுக்கு பதிலாக இம்முறை வவுச்சர் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்கள் பாடசாலை அதிபர்களின் பூரண கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.

வவுச்சர் வழங்கும் நடவடிக்கைகளில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுவதனை தடுக்க இவ்வாறு அதிபர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், வவுச்சர்களின் செல்லுபடித்தன்மையை அறிந்து கொள்ள 0714390000 என்ற இலக்கத்திற்கு வர்த்தகர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வைக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.