(FASTNEWS|COLOMBO) சில புகையிரத தொழிற்சங்கள் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து சேவை சங்கம் என்பன நாளை(09) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவுள்ளதாக தீர்மானித்த பணிப்புறக்கணிப்பில் எந்த விதமாற்றமும் இல்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் இணைந்து நாளை(09) நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வீதிச் சட்டம் மற்றும் அதிகரிக்கப்பட்ட அபராதம் என்பவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை தனியார் பேருந்துகள் சேவை சங்கம், நாளை(09) நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் அமைப்பாளர் குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.