கண்டி – குண்டசாலை, அரத்தன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நாளை(19) பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, காலை 07.00 மணி முதல் மாலை 05 மணி வரையில் 10 மணி நேர நீர் வெட்டு இவ்வாறு அமுலில் இருக்கும் எனநீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
திகன நகரம், விக்டோரியா வீதி, கோனவல வீதி, மல்பான வீதி, மெனிக்ஹின்ன, மஹவத்த மற்றும் போதிகல ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு இவ்வ்வாறு அமுலில் இருக்கும் எனவும், அது தவிர அமுனுகம, குன்னேபான, பன்வில மற்றும் அஹஸ் பொகுன ஆகிய பிரதேசங்களுக்கும் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.