நாளை(19) 09 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

(FASTNEWS|COLOMBO) – மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை(19) காலை 08 மணி முதல் 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வத்தளை, களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை பிரிவுகளிலும் பேலியகொட, வத்தளை, ஜா- எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபை எல்லைப் பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.