(FASTNEWS|COLOMBO) – அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் நாளை(22) காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவலை ஆகிய மாநகர சபைகளின் அதிகார பிரதேசங்களிலும், மஹரகமை, பொரலஸ்கமுவ, கொலன்னாவை ஆகிய நகர சபைகளின் அதிகார பிரதேசங்களிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதனுடன் கொட்டிகாவத்தை முல்லேரியா பிரசே சபையின் அதிகார பகுதிகளுடன், இரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.