பல அற்புதங்களை, தன்னகத்தே வைத்திருக்கும் நாவல் மரங்கள், பொதுவாக, மனிதரின் சர்க்கரை பாதிப்புகளுக்கு தீர்வாக விளங்கி, இரத்தத்தை, சுத்திகரிக்கும் தன்மை மிக்கதாகத் திகழ்கின்றன. நாவல் மரத்தின் விதைகள் மற்றும் பழங்கள் மனிதர்க்கு ஏற்படும் பித்தம் எனும் பாதிப்புகளை சரியாக்குகின்றன.
பசியை அதிகரிக்கும்:
நாவல் பழங்களில் உள்ள தாதுக்கள், இரும்புச்சத்தின் காரணமாக, உடலுக்கு வலிமை தரும் ஆற்றல் மிக்கது. செரிமானத்தை தூண்டி, பசியை அதிகரிக்க செய்யும்.
வயிற்றுப் போக்கு:
நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக் கட்டு உண்டாவது குறையலாம். நாவல் பழத்தினால் அதிக தாகம் நீங்கும். பழுக்காத காய்களை நன்கு உலர்த்திப் பொடி செய்து, சிறிது அதில் எடுத்து, மோரில் கலந்து பருகிவர, வயிற்றுப் போக்கு குணமாகும்.
களைப்பு நீங்கும்:
நாவல் மரப்பட்டைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருக, களைப்பு, இருமல், நீர் தாகம் நீங்கி, சுவாச வியாதிகளும் நீங்கி விடும்.மேலும், இந்த நீர், குரலில் இனிமையைக் கூட்டும். பொடியாக்கிய நாவல் மரப்பட்டையை, காயங்களின் மேல் இட, காயங்கள் விரைவில் குணமாகும்.
மேலும் வீக்கம், கட்டி இவற்றின் மீதும் இட்டு கட்டிவர, அவை யாவும் குணமாகும்.. நாவல் வேறை நீரில் ஊற வைத்து, அந்த நீரைப் பருகிவர, வயிற்றுப் போக்கு, சர்க்கரை பாதிப்புகளை போக்கும், மேலும் சூட்டை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி, உடலை வலுவாக்கும். நாவல் விதைகளை தூளாக்கி, மாவிலைகளோடு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட, வயிற்றுப் போக்குகள் நின்று விடும்.
இரத்தத்தை அதிகரிக்கும்:
நாவல் பழம் சாப்பிட்டுவர, மூக்கில் இருந்து இரத்தம் வடிவது குறையும், செரிமான சக்தியை அதிகரிக்கும், உடல் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தத்தை அதிகரிக்கும். ஊற வைத்த நாவல் பழ சாறு, உடலுக்கு சிறந்த வியாதி எதிர்ப்பு மருந்தாக விளங்கும். நாவல் பழத்தை உப்பிட்டு உண்டுவர, தொண்டைக்கட்டு, நா வறட்சி சரியாகும். நாவல் பழக் கொட்டைகளை காய வைத்து பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் கலந்து பருகிவர, சர்க்கரை பாதிப்புகள் விலகும்.