நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62,500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த, இந்த அனுமதிப்பத்திரங்கள் வேறு நபர்களுக்கு 180 முதல் 200 மில்லியன் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இலங்கை நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களுக்கும் கடந்த வாரம் முதல் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் கொள்வனவு செய்ய முடியும். இன்னும், இந்த அனுமதிப்பத்திரத்தை வேறு எந்தவொரு நபருக்கும் கைமாற்றம் செய்யவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும். என்ஜின் கொள்ளளவு மற்றும் எரிபொருள் மாதிரி போன்றன தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது, எந்தவொரு வாகனத்தையும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.