நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கி சூடு – தாயார் உயிரிழப்பு… (update)

நிட்டம்புவ, ஹத்வடுன்ன பகுதியில் இன்று(24) மதியம் 12.55 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தாயார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

—————————————————————- update 14.36 p.m

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கி சூடு – இருவர் படுகாயம்…

நிட்டம்புவ ஹக்வடுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தாய் மற்றும் மகன் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் படுகாயம் அடைந்த தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்திய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.