நிதியமைச்சருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு சுயதொழில் புரிவோர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த முறைப்பாட்டை இன்று வியாழக்கிழமை முற்பகல் பதிவு செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும், இதுதொடர்பாக நிதியமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை எதிர்த்தும் இந்த முறைப்பாடு செய்யப்படவிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கான விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு அதிருப்தி வெளியிடும் வகையில் அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் கொழும்பில் இன்று பகல் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளது.