நிதியமைச்சின் செயலாளர் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழுவில்…

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக இன்று(23) மூன்றாவது நாளாகவும் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இந்த விசாரணைகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டன.

நிதி அமைச்சின் செயலாளர் எச். எஸ். சமரதுங்க இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நேற்று இரண்டாவது நாளாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, பிணை முறி விநியோகம் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், தற்போது விலைமனுக் கோரல், அடிப்படையில் இடம்பெறும் பிணை முறி விநியோகத்தை மாற்றி, புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.