நிதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக தனது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமராக பதவியேற்ற அவரின் கீழ் நிதி, பொருளாதார கொள்கைகள் மற்றும், வளங்கள் அபிவிருத்தி, புத்தசாசன கலாசார மற்றும் மதவிவகார, நகர அபிவிருத்தி , நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதிகள் ஆகிய அமைச்சுக்கள் செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.