நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி வழக்குத் தாக்கல்…

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்திற்கான வர்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் ஆகியோர் தொடர்புபட்டுள்ளனர். அவர்களின் சகாகளின் தேவைக்காகவே இந்த ஊழல் இடம்பெற்றுள்ளது நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி விவகாரத்தில் முறையான சட்ட அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய வங்கி விவகாரம் குறித்து நிதி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து நிதி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில்;

“…நிதி அமைச்சு எனது பெயரில் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளதாக சந்தேகப்படுவதாகவும், மேலும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும்…” முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.