நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ரூ.100 மில்லியன் கோரி நாமல் வழக்குத் தாக்கல்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கெதிராக இரண்டு வழக்குகளை நீதிமன்றத்தில் இன்று(10) பதிவு செய்துள்ளார்.

நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டுமெனக் கோரியே குறித்த வழக்கினை நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிதியை மோசடி செய்ததாக தெரிவித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்தமைக்கு எதிராக  குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.