2 பேர் மட்டுமே நடித்த படம், 24 மணி நேர படம், 6 மணி நேர படம் என சாதனைகளை மையமாக வைத்து சில படங்கள் உருவாகின்றன.
நடிகை நித்யா மேனனும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். நித்யா மேனன் தற்போது, ‘பிராணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு பணிகள் மேற்கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் நித்யா மேனன் மட்டுமே நடிக்கிறார். வேறு நடிகர்கள் யாரும் இதில் இடம்பெறவில்லை.
‘வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது பிடிக்கும். ஆனாலும் அதுபோன்ற பாத்திரங்கள் எப்போதாவதுதான் வருகிறது. அப்படி வந்த கதாபாத்திரம்தான் “பிராணா”.
ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள், நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் என பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் நான் மட்டுமே நடித்திருப்பது மறக்க முடியாத அனுபவத்தை தந்தது’ என்றார் நித்யா மேனன்.
சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டு நித்யாமேனனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.