கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று உயிரிழந்ததன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 தாதியர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.