நியூசிலாந்தின் க்றிஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்த பூரண விசாரணைகள் இன்று(13) முதல்…

(FASTNEWS | COLOMBO) – நியூசிலாந்தின் க்றிஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்த பூரண விசாரணைகள் இன்று(13) முதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி, நடாத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இனி இவ்வாறான தாக்குதல் ஒன்று நியூசிலாந்தில் இடம்பெறக்கூடாது என்று நோக்கில், தற்போதைய விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் சமுக வலைத்தள செயற்பாடுகள், சர்வதேச தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன் கீழ் ஆராயப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.