இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 45 ஓட்டத்தினாலும், இராண்டாவது போட்டியில் 21 ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது இறுதியமான போட்டி இன்று(08) எடன் பார்க்கில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை குவித்தது.
365 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 41.4 ஓவர்களில் 249ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணியின் புள்ளி விபரம்;
