நியூசிலாந்து அணியினை வீழ்த்தி இந்திய அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி..

சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டி நியூசிலாந்தின் மவுன்ட் மங்கனியுவில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில், ரோஹித் ஷர்மா 87 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றுக் கொடுத்தார். பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 40.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்தநிலையில், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2க்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.