(FASTGOSSIP| COLOMBO) – முன்னாள் டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் நியூசிலாந்து தொடரில் விக்கெட் காப்பாளராகவே இலங்கை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர்பில் தெளிவூட்டும் நேற்றைய(08) ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறும் போட்டிகளில் லஹிறு திரிமன்ன மற்றும் ஓஷத பெர்னாண்டோ ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.