(FASTNEWS|NEW ZEALAND) நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் உள்ள பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. தாக்குதல் நடத்தியதை குறித்த நபர்கள் பேஸ்புக் சமூகவலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.