அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 தீயணைப்பு படை வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் நியூயார்க்கில் மேன் காட்டன் மிட்டவுன் பகுதியில் உள்ளது. ‘டிரம்ப் டவர்’ என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டிடம் 664 அடி (202 மீட்டர்) உயரம் கொண்டது.
இந்நிலையில் இக்கட்டிடத்தின் 50-வது மாடியில் நேற்று திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கட்டிடத்தில் தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு படை வீரர்களும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.