நியூயோர்க்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதைக்குள் பிரவேசித்த பாரவூர்தியைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 29 வயதான சாரதி ஒருவர் பொலிசாரினால் சுடப்பட்டதுடன், காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மேலும் 11 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.