நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 06 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான்

(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று(26) இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றது.

238 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களை பெற்று, நியூஸிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி எதிர்கொண்ட 7 போட்டிகளில் 3 இல் வெற்றியை சந்தித்து 7 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.