நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகள் இன்று களமிறங்குகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று(24) இடம்பெற உள்ளது.

ஐந்து இருபதுக்கு-20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இன்றைய போட்டி, நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 12.20க்கு இடம்பெற உள்ளது.