இந்த நிரந்தர ஹேர் ஸ்ட்ரைட்டனிங் முறை 2-3 செசன்களில் செய்யப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான பெண்கள் இதை செய்வதற்கு காரணம் இது ஒரு தடவை செலவழித்தால் போதும் என்பதால் இதை நாடுகின்றனர். ஆனால் இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. எனவே எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொண்டு செயல்படுவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
முடி உதிர்தல்:
ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்வதில் வரும் முக்கியமான பிரச்சினை முடி உதிர்தல் ஏற்படுகிறது. ஏனெனில் நமது முடியின் மயிர்க்கால்கள் வலுவிழந்து விடுகின்றனர். இதற்கு ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் கெமிக்கல் தான் காரணமாகும். மேலும் ஹீட்டான கருவியை பயன்படுத்துவதால் அவை அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகின்றன.
அதிகமான வறட்சி:
ஹேர் ஸ்ட்ரைட்டனிங் உங்கள் முடியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியாக்கி விடுகிறது. அதிகமான கெமிக்கல் மற்றும் ஹீட்டான கருவியை பயன்படுத்துவதால் இந்த மாதிரியான பக்க விளைவை அதிகப்படுத்தி விடுகிறது.
அலற்சி:
இது இன்னொரு விதமான பிரச்சினை ஆகும். ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பண்ணுவதால் அலற்சியும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் கெமிக்கல்கள் மயிர்கால்களின் தன்மையையே மாற்றி விடுகிறது. எனவே இதனால் நமது ஸ்கால்ப்பில் அலற்சி ஏற்படுகிறது. எனவே ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பண்ணும் போது நல்ல தரம் வாய்ந்த ஹேர் ஸ்ட்ரைட்டனிங் பொருட்களை கொண்டு செய்வது நல்லது.
உடையும் முடிகள்:
இந்த ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்வதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் மற்றும் ஹீட் போன்றவை முடி உதிர்விற்கு காரணமாக அமைகின்றன. உடையும் இந்த முடிகளால் ஆரோக்கியமற்ற கூந்தல் தான் பரிசாக கிடைக்கிறது. இதை தடுக்க தினமும் உங்கள் பியூட்டி முறைகளில் ஹேர் சீரம் பயன்படுத்துங்கள். இவை உங்கள் கூந்தல் உடைவதிலிருந்து தடுத்து போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும்
புதிய முடிகள் வளர்வதை தடுத்தல்:
நிறைய ஹேர் கேர் எக்ஸ்பட்டின் கருத்து ஹேர் ஸ்ட்ரைட்டனிங் முறை உங்கள் கூந்தல் வளர்ச்சியை தடுக்கிறது என்பது தான். இதற்கு இதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் மற்றும் ஹீட் தான் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்