எனினும் தான் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செல்லாமல் வேறு வழியில் வாக்குமூலத்தை அளிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணை மேற்கொண்டதனை போன்று, வேறு பிரபலம் ஒருவரின் வீட்டில் விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு நிரூபமா ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரபல தலைவர் ஒருவரிடம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் ஊடகவியலாளர் சந்திப்பில் சுமனதாஸ ஊடாக ராஜபக்சர்களின் ரகசியங்களை வெளியிட்ட தகவல் தொடர்பிலே நிரூபமா ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள மல்வான மாளிகை நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திரு நடேசனுடையதென சுமனதாஸ கூறியிருந்தார்.
மல்வானை மாளிகையை கட்டுவதற்காக பூஜை வழிபாடுகள் தன்னால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிரூபமா ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
நிரூபமா ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்சவின் மருமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.