இறக்குமதி செய்யப்படும் சீனிகளுக்கான சீனிக்கு சிறப்பு வியாபாரப் பண்டத்தீர்வை குறைக்கப்படுவதால் அரசாங்கத்திற்கு 19.337 மில்லியன் நஷ்டம் ஏற்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகவே இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விலையை 29 ரூபா 75 சதமாக நேற்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் சீனிக்கான பண்டத் தீர்வையை 30 ரூபா இல் இருந்து 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆண்டு தோறும் இலங்கையில் 650 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்படுகின்றது என்றும் இதேவேளை 56 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியே வருடாந்தம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.