நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார்.
இது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறும் அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை, நேற்று நள்ளிரவு முதல் உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.