நிர்வாக சேவை சங்கமானது உறுதியான நிலைப்பாட்டில்

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க அரச அதிகாரிகளை அழைத்து அது தொடர்பில் அவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோரை அறிவுருத்தவுள்ளதாக ஸ்ரீ லங்கா நிர்வாக சேவை சங்கமானது தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவிற்கு அரச நிர்வாக செயலாளரை அழைத்து விசாரிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமானது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.