மேற்கு சூடானில் பழுதாகி நின்ற லொரி மீது பஸ் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து வடக்கு டார்பூர் மற்றும் மேற்கு கொர்டாஃபன் மாநிலம் இடையே உள்ள உம் கடதா எல்லையில் மேற்கு சால்வேஷன் சாலையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை முழுமையாக தெரியாத நிலையில், மீட்கப்பட்டோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என உம் கட்தா காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலில் அதிகம் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் சூடானும் இடம்பெற்றுள்ளது. விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைகளில் வேகத்தை கண்காணிக்க ரேடர்களை நிறுவுதல் போன்ற புதிய திட்டங்களை வகுத்து வருவதாக உள்துறை மந்திரி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.