நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு தமது கட்சி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்து அந்த முறையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியலமைப்பு சீர் திருத்த இடைக்கால அறிக்கை சம்பந்தமாக விளக்கமளிக்கும் வகையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
(rizmira)