(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் யோசனையை கடந்த 19ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைத்த பின்னர் கொழும்பு அரசியல் மையத்தில் பல கேள்விகள் எழுந்தன.
எனினும் இந்த யோசனையை யார் முன்வைத்து என்ற கேள்வி தொடர்கிறது. இந்த கேள்விகளுக்கு விடைகாண கடந்த வாரத்தில் நடந்த சில சந்திப்புக்கள் குறித்து ஆராய வேண்டியூள்ளது.
செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. மறுதினம் அவசர அவசரமாக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று அழைக்கப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லதொழிக்க விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. தனக்கு வந்த கோரிக்கையை அடுத்து அமைச்சரவையைக் கூட்டியதாக ஜனாதிபதி கூறியூள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் யோசனையை ஜனாதிபதியூம் முன்வைக்கவில்லை பிரதமரும் முன்வைக்கவில்லை.
இந்த முயற்சியை அவசரமாக முன்னெடுத்தது யார்? இதன் பின்னணி என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, சில அரசியல் சந்திப்புக்கள் குறித்தும் இதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் பார்க்க வேண்டியூள்ளது.
18ஆம் திகதி மாலை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. மறுதினம் விசேட அமைச்சரவைக் கூடுகிறது.
19ஆம் திகதி காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ ஜனாதிபதியைச் சந்திது பேசுகிறார். இதன்போது என்ன பேசப்பட்டது? இந்தச் சந்திப்பில் அமைச்சவையில் முன்வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் குறித்து ஆராயப்பட்டதா?
இதற்கு முன்தினம் அதாவது 18ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சஇ ஜனாதிபதியை அவசரமாக சந்தித்துள்ளார். இதன்போது என்ன பேசப்பட்டது?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேட முன்னர்இ அன்றைய தினம் பகல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க அதிகாரியொருவரைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியூள்ளன.
குறித்த அமெரிக்க அதிகாரியூடனான சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான்இ அன்றைய தினம் மாலை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியைச் சந்தித்து பேசியூள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, தனது அமெரிக்க பிரஜா உரிமை,யை இரத்துச் செய்துவிட்டாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவூம் வெளியாகாத நிலையில் தான் அமெரிக்க அதிகாரியூடனான சந்திப்பு நடந்துள்ளது.
அமெரிக்க அதிகாரி தரப்பில் திருப்திகரமான பதில் கிடைக்காததால்இ அன்று மாலை ஜனாதிபதியை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சந்திப்புக்களுக்கு மத்தியில், 10 நாட்களுக்கு முன்னர, பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் ஒரு முன்வைத்துள்ளார். இந்தக் கோரிக்கைகள் என்ன என்பது குறித்து தேடிய போதுஇ இங்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான யோசனைகள் குறித்துதான் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ சுமந்திரன் எம்.பி.யைத் தொடர்புகொள்வதற்கு முன்தினம்இ மகிந்த ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பமாகியூள்ளன.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியூள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்கப் பிரஜா உரிமை இரத்துச் செய்வதில் உள்ள பிரச்சினைஇ மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக போட்டியிட முடியாத நிலை ஆகியவற்றை மையப்படுத்திஇ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கான முயற்சியை மகிந்ததரப்பில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்இ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் சிக்கல் இருக்கிறது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான புறச்சூழல் சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை. எனவேஇ தான்இ ஜனாதிபதிஇ பிரதமர்இ எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து இந்த நகர்வை முன்னெடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
உயர்மட்டத்தில் உள்ள மூவருக்கும் கடந்த 10 நாட்களில் நடந்த சந்திப்புக்களில் பேசப்பட்ட விடயங்களை யாரும் அறிந்திருந்தா நிலையில் தான், கடந்த 19ஆம் திகதி நடந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் ஆகியோர் பல கேள்விகளை எழுப்பிய போதிலும், ஏனையோரில் பலர் எதிர்ப்பையூம், ஒரு சிலர் மட்டும் ஆதரவையூம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில்இ தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவூசெய்வதற்காக அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள்இ அமைச்சர்கள், சிலர் அமைச்சரவையில் கேள்வியெழுப்பி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் யோசனை அரசியலில் பல கேள்விகளை எழுப்பியூள்ள நிலையில்இ பிரதான அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் வரலாம் என்ற செய்திகளும் இருக்கின்றன.
அரசியலில் களத்தில் பேசப்பட்டு, வெளியே வராத பல செய்திகளை எமது செய்திகளில் தொடர்ந்து எதிர்பாருங்கள்.