பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் சிலர் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றனர். முறையாக அனுமதி பெற்று இயங்கிவரும் சுரங்கங்களும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று 9 பேர் உயிரிழந்தனர்.
டார்ரா ஆடம் கேல் பகுதி அருகேயுள்ள அக்குர்வால் கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததால் உள்ளே பணியாற்றி கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்தனர்.