நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலை காரணமாக, சில உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தேநீர் 5 ரூபாவினால் இன்றிலிருந்து(28) குறைக்கப்படவுள்ளதாகவும், உணவுப் பொதி, கொத்து ரொட்டி என்பவற்றின் விலையும் 10 ரூபாவினால் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தற்போது நாட்டில் நாம் எதிர்பார்த்த சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் முடிவு மற்றும் தற்போதைய பிரதமர் மீது எமக்கு பூரண நம்பிக்கையுள்ளதாலேயே இந்த விலைக் குறைப்பை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.