நிலவும் காலநிலையில் மாற்றம் – சில பிரதேசங்களுக்கு 2 மணிக்குப் பின்னர் மழை…

நிலவும் காலநிலையில் தற்போது சிறிது மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன்படி கிழக்கு மாகாணத்திலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

R>Rishma