நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதுடன் 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 24,000 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
956 வீடுகள் பகுதியளவிலும் 20 வீடுகள் முழுமையாகவும் பாதிப்படைந்துள்ளதோடு, முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக 2.5 மில்லியன் ரூபா வரையில் நட்ட ஈட்டைப்பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமல்நாதன் மேலும் தெரிவித்துள்ளார்.