இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலை அடுத்து, இருநாட்டு மீனவர்களையும் விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கொழும்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இலங்கை சார்பில் 85 மீனவர்களும் இந்தியா சார்பில் 19 மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர்.
தற்போதுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, தகவல்கள் வௌியாகியுள்ளன.