நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று(09) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

ஏதேனும் ஓரிடத்தில் மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.