நிலவும் வரட்சியான காலநிலையில் மின்வெட்டு குறித்து மின்சார சபை எதிர்வு கூறல்…

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினால் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், மின்சார உற்பத்தி வீழ்ச்சி காரணமாக மின் வெட்டு அமுல்படுத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் மின் உற்பத்தி நிலையங்களின் பிரதான நீரேந்து நிலைகளான விக்டோரியா, ரந்தெனிகல, கொத்மலை, காசல்ரீ, சமனலவெவ ஆகியனவற்றின் நீர் மட்டம் 50.2%ஆக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இந்தக் காலப்பகுதியில் குறித்த நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 35% ஆக வீழ்ச்சியடைந்திருந்ததாகவும், இவ்வாறான நிலையிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

-Rishma