நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில், குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் நாளை(25) முதல் மாற்றம் ஏற்படக்கூடுமென வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.
எனினும் இரத்தினபுரி, களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.