நில்வலா கங்கையின் பாணதுகம பிரதேசத்தில் நீர் மட்டத்தை அளவிடும் பகுதியில் நீர் மட்டம் இன்று(08) காலை 06 மணியளவில் சிறியளவில் அதிகரித்துள்ளதாகவும், மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நில்வலா கங்கையின் அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.