இலங்கை நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க தயாராகி வருவதாக, அரச நில அளவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விரைவில், அமைச்சரவையில் சமர்ப்பிக்க காணி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க இருந்த காலத்தில், இதுபோன்ற அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் எழுந்த எதிர்ப்புக் காரணமாக அது நிராகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடுடன் இருப்பதாக, அரச நில அளவையாளர்கள் சங்கத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.