“நில செவன ” ​அரச சேவைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சொந்த வீடுகள்…

அரச சேவைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான சொந்த வீடுகள் முறை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நில செவன ” ​வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்திற்கான அரச சேவைகளை இன்று(02) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வருடமாக 14 இலட்சம் அரச பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கத்தால் முடிந்தது.

அதேப்போல் இந்த வருடத்தில் ஊழல், மோசடியற்ற அரச பணியாளர்களை உருவாக்குவதையே எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

 

####