நிவிதிகல – கலவான வீதியில் மண்சரிவு…

நிவிதிகல – கலவான வீதியில் பிங்கந்த பகுதியில் இன்று (16) அதிகாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக அந்த வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் மாற்று வீதிகளாக ஹங்கமுவ மற்றும் பலாவெல வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.