நிஸ்ஸங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

எவன்காட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணை செய்யவே இவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக பலமுறை நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், சுகயீனம் காரணமாக அவர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.