நாளொன்றுக்கு மூன்று கோடி ரூபா வருமான இழப்பினை, அவன்ட் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த மன உளைச்சல் காரணமாக ஊடகங்களின் முன்னிலையில் சேனாதிபதி மரண ஒலமிட்டு புலம்பி வருகின்றார்.
லஞ்சம் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நானும், சக அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைகளில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகை பணத்தை அவன்ட் கார்ட் நிறுவனம் கொள்ளையிட்டு வந்தது அந்த விடயங்கள் பற்றி நான் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தேன்.
தற்போது அந்தப் பணம் நாட்டுக்கு கிடைக்கின்றது என அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.