மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
அவர்விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என மலேசிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின்பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்திற்காக மலேசியா சென்றார் வைகோ.
கோலாலம்பூரில் வானூர்தி நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரிகள், மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோ பெயர் இடம்பெற்றிருப்பதாக கூறி அவருக்கு தடை விதித்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் குற்றத்சாட்டியுள்ளனர்.
வைகோ மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஸ்போர்ட் பறிமுதல்
வைகோவின் பாஸ்போர்ட்டையும் மலோசியா அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். இன்றுஇரவு 10.45 மணி விமானத்தில் வைகோ திருப்பி அனுப்பப்படுகிறார்.
தொண்டர்கள் கண்டனம்
வைகோவுக்கு மலேசிய அரசு தடைவித்திருப்புதற்கு மதிமுக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசத்துரோக வழக்கில் சிறைக்கு சென்ற வைகோ அண்மையில் தான் விடுதலையானார்.
ஆபத்தானவர் என தடை
இந்நிலையில் மலேசியா சென்ற அவரை அந்நாட்டு அரசு ஆபத்தானவர் என தடை விதித்து திருப்பி அனுப்புகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– One India