ஒலிம்பிக்கில் 28 பதக்கங்களை வென்று நீச்சல் உலகின் மன்னனாகத் திகழும் மைக்கல் பெல்ப்ஸிற்கும் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாமீனுக்கும் இடையில் கடலில் நடைபெற்ற 100 மீட்டர் நீச்சல் போட்டியில் சுறா மீன் வெற்றி பெற்றது.
பந்தய இலக்கை முதலில் எட்டுவதில் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாவுக்கும் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸிற்கும் கடும் போட்டி நிலவியது.
வெள்ளை சுறா , 36.10 வினாடிகளில் இலக்கை எட்டியதுடன் பெல்ப்ஸ், 38.10 வினாடிகளிலேயே பந்தய தூரத்தை எட்டினார்.
மனிதர்களின் சராசரி நீச்சல் வேகம் மணிக்கு 8 முதல் 10 கிலோ மீட்டராக உள்ளதுடன் வெள்ளை சுறா மீன்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை நீந்தும் ஆற்றல் பெற்றுள்ளன.
கணினியால் உருவாக்கப்பட்ட குறித்த சுறாவுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்று, அதனை வீழ்த்த தயாராக இருப்பதாக பெல்ப்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – இங்கிலாந்து இடையில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் நாளான இன்று ரங்கன ஹேரத் சாதனை ஒன்றினை பதிவாக்கியுள்ளார். ரங்கன ஹேரத் Alex Halesஇனது…
இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலிய அணியினர் நேற்றைய தினம்(28) 3வது ஒருநாள் போட்டியில் ஆடினர். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 49.2ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266ஓட்டங்களை…
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கையை சேர்ந்த நடுவர் குமார் தர்மசேனாவின் செயலால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். சமீப காலமாக நடுவர் குமார்…