நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு 2/3 பெரும்பான்மை வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு…

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலம் 2/3 ​பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு இன்று(03) அறிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

குறித்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில விதிமுறைகள், நீதித்துறைக்கு இருக்கின்ற அதிகாரங்கள் அரசாங்கத்தால் பறிக்கப்படுவதாக அமைந்துள்ளது என மனுவில் கூறப்பட்டது.

இதேவேளை நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் வேறு சில தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சட்டமூலத்துக்கு ஆதரவாகும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாக இடம்பெற்று வந்த விசாரணையின் முடிவு பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

#####